--- --:--:-- --

பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

7.1

செங்கல்பட்டு அருகே பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிறுபாக்கத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் வழியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆனால் பள்ளி நேரமான காலை 8 மணிக்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே சூனாம்பேட்டிலிருந்து அச்சிறுப்பாக்கம் வரை இயக்கப்படுகிறது. எனவே அந்த பேருந்தில் மாணவ-மாணவிகள் கூட்ட நெரிசலில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

 

இப்படி ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் அச்சிறுபாக்கத்தில் இருந்து சூனாம்பேடு வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon