ஹர்பஜன் சிங் படத்தில் பிக் பாஸ் லாஸ்லியா
பிக்பாஸில் புகழ்பெற்ற லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிக்கும் புதிய படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா ஏராளமான தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில் ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.






