பள்ளி ஆசிரியை அடித்து இழுத்து சென்ற அவலம்
மேற்கு வங்க மாநிலத்தில் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைப்பதை கண்டித்த பள்ளி ஆசிரியர் சகோதரிகள் இருவர் ஊராட்சி மன்ற தலைவரால் அடித்து, துன்புறுத்தி கட்டி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினாஞ்ச்பூர் மாவட்டம் பதான் நகர் கிராமத்தில் 12 அடி சாலை அமைக்க இடம் கொடுத்த சகோதரிகள் இருவர் பின்னர் சாலை 24 அடிக்கு விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி தலைவர் அமைச்சர் உள்ளிட்டோர் அந்த இரு சகோதரிகளையும் அடித்து துன்புறுத்தி கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அமல் சர்க்கார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.






