நோ மேரேஜ் என கூறும் பெண்கள்! மொரட்டு சிங்கிள்.. பெண் கிடைக்காமல் தத்தளிக்கும் ஆண்கள்
தமிழகத்தில் சிங்கிள் பசங்கள் என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பது தான் மகிழ்ச்சி என்று சமூக வலைதளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம்.
ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை, குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை, ஆண்களுடன் எவ்வித உறவையும் கொள்ளப்போவதில்லை சிங்களாகவே இருப்போம் இப்படி சொல்லிக்கொண்டு தான் சுற்றி வருகின்றனர் தென்கொரிய இளம்பெண்கள்.
இதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்களின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் இரண்டு பெண்கள் தான் ஜங்சே யங்,பெக் ஹானா. ஆனால் இரண்டு பெண்ணியவாதிகள் சேர்ந்து தென்கொரியாவில் நோ மேரேஜ் இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கத்தில் இணைய வேண்டும் என்றால் நான்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது டேட்டிங், திருமணம், செக்ஸ், குழந்தைகள் எனும் இந்த நான்கிற்கும் நோ செல்லும் பெண்கள் மட்டும்தான் இந்த இயக்கத்தில் இணைய முடியும். விளையாட்டாக தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தென்கொரியாவில் தற்போது பூதாகரமாகி உள்ளது. ஆரம்பத்தில் பத்து, இருபது பேர் என ஆதரவளித்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் தென்கொரிய இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 44 சதவீதம் பெண்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளனர். திருமணம் வேண்டாம் என அடம்பிடிக்கும் 56% பெண்கள் கூறும் காரணங்களும் அதிர்ச்சி ரகம்.
இது என் உடல், விருப்பம், பிரசவத்தின் உடல் வலி எனக்கு தேவை இல்லை, ஒரு குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதை காட்டிலும் நான் தனிமையில் வாழ்ந்து, எனது வாழ்க்கை இலட்சியத்தை அடைவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் திருமணம் செய்து கொண்டு கணவருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை இதுபோன்று மேலும் தென்கொரிய பெண்களின் காரணங்களை கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர் ஆண்கள்.
அத்துடன் நோ மேரேஜ் இயக்கத்தின் காரணமாக அந்நாட்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் சராமாரியாக குறைந்து வருகிறது. இது தொடர்ந்து வந்தால் தென்கொரியா மோசமான பின் விளைவுகளை சந்திக்கலாம் என உலக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உலகிலேயே குறைந்த அளவு குழந்தை பிறப்பை கொண்டுள்ள தென்கொரியாவில் பெண்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராதவரை எதுவும் மாறுவதற்கு வாய்ப்பில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர் ஆண்கள்.






