--- --:--:-- --

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

1

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இவை தவிர பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட 1,652 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக கிராமப்புற குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போடவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon