கோவையை அடுத்துள்ள அன்னூர் அருகே 12 வயது சிறுமியை சோள காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்துள்ள அன்னூர் பெரியார் நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பனிரெண்டு வயது சிறுமியை அங்குள்ள பகுதியில் உள்ள சோளக்காட்டில் வைத்து பழனிசாமி என்பவரது மகன் அரவிந்த் வயது 23,மற்றும் வெங்கிட்டான் என்பவரது மகன் காளிதாஸ் வயது 26 ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக துடியலூர் மகளிர் காவல் நிலைய போலிசார் பலாத்காரம் செய்த இரண்டு பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இது தொடர்பாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.கைது செய்யப்பட்டுள்ள காளிதாஸ் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.






