ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தலைவி திரைப்படத்தின் 2-வது டீசர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டு வரும் தலைவி திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளன்று a.l. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்தின் முதல் டீசர் வெளியானது.
வெண்ணிற ஆடை படத்தின் முதல் டீசர் வெளியானது. வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகமான காட்சியில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். டீசரில் அரசியல்வாதியை போல கங்கனா ரனாவத் தோன்றிய காட்சிகள் அவர் ஜெயலலிதாவை போல இல்லை. ஒப்பனையில் இன்னும் கவனம் செலுத்த வேண்டி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவை போல கங்கனாவை சித்தரிக்க முயன்று அனிமேஷன் படத்தை போல் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள தலைவி படத்தின் இரண்டாவது டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் எம்ஜிஆர் தோற்றத்தில் நடித்துள்ள அரவிந்த்சாமி கருப்புவெள்ளை காலத்திலிருந்த எம்ஜிஆரை அப்படியே கண்முன் நிறுத்தி உள்ளதாக கூறுகின்றனர் ரசிகர்கள். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் வரும் அரவிந்த் சுவாமியின் தத்ரூபமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஜெயலலிதாவின் டீஸர் வெளியான போது செய்த தவறை எம்ஜிஆர் டீசரில் திருத்தி உள்ளதால் தலைவி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






