“2021-ல் நாங்க தான்” என விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு

234 தொகுதிகளிலும் சைலண்டாக இருக்கணும், 2021இல் நாங்க தான் இருக்கணும் என நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது டீசர் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியானது.

 

இந்த நிலையில் சென்னை நங்கநல்லூர் பகுதியில் மாஸ்டர் திரைப்படத்தின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் இடம் பெற்றுள்ள வாசகங்களை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

234 தொகுதிகளிலும் சைலண்டா இருக்கணும், 2021இல் நாங்க தான் இருக்கணும் மக்கள் பணி செய்ய வரும் மாஸ்டர் என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் விஜய் ரசிகர்களிடையே நடைபெற்றுள்ளது.


Leave a Reply