--- --:--:-- --

தேரி மேரி பாடலை நாய் பாடியது இணையத்தில் வைரலாகிறது

5

வட மாநிலம் ஒன்றில் ஹார்மோனியத்துடன் ஒருவர் பாடுவதை அவருடன் சேர்ந்து நாயும் பாடுவது போன்ற காட்சி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகி ராணி ஆண்டாள் பாடிய தேரி மேரி ககாணி பாடல் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பட்டிதொட்டி எங்கும் பிரபலம்.

 

இந்த நிலையில் அதே பாடலை ஹார்மோனியத்துடன் ஒருவர் பாட அவருடன் சேர்ந்து அவரது வளர்ப்பு நாய் ஒன்று இணைந்து பாடுகிறது. தொடர்ந்து அவர் ராகத்தை இழுக்கும் போது தானும் பாட வேண்டும் என்ற நோக்கில் நாய் ஊளையிட்டு தனது பாடல் பாடும் திறமையை வெளிக் காட்டியது.

 

சமூகவலைதளங்களில் பரவிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ எங்கே எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.

Leave a Reply

Right Menu Icon