திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பேருந்து ஓட்டுனர் செல்போனை பார்த்தபடியே பேருந்து இயக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் வழியாக செல்லும் செல்லும் தனியார் பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
அப்போது அவர் தனது செல்போனில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பார்த்தபடி பேருந்தை இயக்கினார். போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு பொது மக்களின் உயிரோடு விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணிகள் ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளனர்.
இதை சற்றும் கண்டுகொள்ளாத அவர் செல்போனை பார்த்தபடியே தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேலாக பேருந்து இயக்கியுள்ளார். இதனை தனது செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் இணையத்தில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயர வாய்ப்பு..!






