--- --:--:-- --

வலுவான ஆஸி., அணியை சமாளிக்குமா இந்தியா..? ‘விறுவிறு’ ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்!!

0c28f96d-438a-4a71-b23b-77446ff956cc

3 போட்டிகள் கொண்ட இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு, அதிரடி மற்றும் அனுபவ வீரர்கள் நிறைந்த ஆஸ்திரேலியா உடனான இந்தத் தொடர் சவாலாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

 

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்தியா வந்த வங்கதேசம், மே.இ.தீவுகள், இலங்கை அணிகளை வீழ்த்தி வெறுங்கையுடன் திருப்பி அனுப்பியது இந்தியா. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.முதல் போட்டி இன்று பிற்பகல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

 

கடந்த ஜுலையில் நடந்த உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்ற ஆஸி.அணி, அதன் பின் இன்று தான் ஒரு நாள் போட்டியில் பங்கேற்கிறது. ஆனால் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் அசத்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பலம் மிக்க அணியாக ஆஸி.அணி இந்தியா வந்துள்ளது. பேட்டிங்கில் ஆரோன் பிஞ்ச், வார்னர், ஸ்மித் ஆகியோருடன் லபுசோன் ஆகியோர் அதிரடி காட்டுவது நிச்சயம். பந்து வீச்சிலும் கம்மின்ஸ், ஸ்டார்க்,மிட்செட், ஹேசல்வுட் என பெரும் மிரட்டல் படையே உள்ளது.

 

இந்தியத் தரப்பிலும் பேட்டிங்கில் ரோகித், லோகேஷ், ஷிகர் தவான், கோஹ்லி ஆகியோர் கலக்கலாக அசத்தி வருகின்றனர். பும்ரா, ஷமி, தாகூர் ஆகியோர் வேகத்தில் மிரட்டினாலும் சுழல் பந்து வீச்சு தான் கவலையளிப்பதாக உள்ளது.

 

எனவே அனுபவ மற்றும் அதிரடி வீரர்களைக் கொண்ட பலம் மிக்க ஆஸி.அணியை இந்தியா சமாளிக்குமா? சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா? என்ற பெரும் எதிர்பார்ப்புடன் முதல் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon