--- --:--:-- --

தமிழக சட்டப்பேரவை கூடியது..! ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு..!!

et

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது.

 

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர் .

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேச முயன்றார் .அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒட்டுமொத்த திமுக எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையை புறக்கணிப்பதாகக் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களைக் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், தமிழக அரசின் கடன் சுமை 4 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை வேலைவாய்ப்பை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon