--- --:--:-- --

தோண்ட தோண்ட தென்படும் எலும்புக்கூடுகள்! அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுகள்!

13

ஒரே சவக்குழியில் 50க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் தொழில் கொடிகட்டி பறக்கும் நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இங்கு சவக்குழி ஒன்றில் இருந்து 50க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மெக்சிகோவின் இரண்டாவது பெரிய நகரமான கிடந்த குவாடலா ஜாரா புறநகர் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகின் கண்களுக்கு தெரிய வந்துள்ளது. மெக்சிகோவின் மேற்கு நகரமான குவாடலா ஜாரா புறநகர் பகுதியில் உள்ள பண்ணையில் இருந்து சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

 

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் தரையை தோண்டி பார்த்ததில் 50க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டறிந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் இங்கு உள்ள தலாஜ் முள்கோ என்ற புறநகர்ப் பகுதியில் 3 ஆயிரத்து 400 சதுர அடி நிலம் விசாரணை வளையத்துக்குள் வந்தது.

 

சந்தேகத்தின்பேரில் மண்ணை தோண்டி ஆய்வு நடத்தியதில் 31 பிணங்கள் மீட்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல இன்னும் ரகசிய கல்லறைகள் அருகாமையில் இருக்கலாம் என சந்தேகித்த விசாரணை அதிகாரிகள் இரண்டு இடங்களை அடையாளம் கண்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.

 

மெக்சிகோவில் ஜாலஸ்கோ மற்றும் குவோடோ ஜுனோ மாகாணங்களில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே போட்டி நடப்பதாகவும் ஒருவரையொருவர் ரகசியமாக கொன்றுகுவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

அவர்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டு ரகசிய கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுவதாக மெக்சிகோ போலீசார் தெரிவிக்கின்றனர். இதன்படி கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகசிய கல்லறைகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரை நூற்றுக்கும் குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன.

 

இவ்வாறு தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் கண்டறிய படுவது குறித்து விசாரிக்க மெக்சிகோ அரசு 3 ஆயிரத்து 200 ராணுவத்தினரை பணியில் நியமித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon