--- --:--:-- --

ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா? விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ?

11

இயக்குனர் அட்லி மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக உறுதியளித்துள்ளார். விஜயை வைத்து இயக்குனர் அட்லி கடைசியாக இயக்கிய திரைப்படம் பிகில். இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக மாறியது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

 

பிகில் மிகப்பெரிய ரெக்கார்டை உருவாக்கியதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. குறிப்பாக படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று விஜய்யின் ராயப்பன் கதாபாத்திரம். ராயப்பன் மையமாக வைத்து ஒரு முழு கேங்க்ஸ்டர் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அது குறித்து இயக்குனர் அட்லியும் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

சமூக வலைதளமான டிவிட்டரில் பிகில் ஹர்சன் என்பவர் இயக்குனர் அட்லீயிடம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதில் மதுரை சம்பவத்தை பார்த்து ராயப்பனுக்கு ஒரு கதை எடு தலைவா என கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்க முன்வந்த அட்லீ செஞ்சிட்டா போச்சு என்று உறுதியளித்துள்ளார்.

 

இன்னொருவர் வேற லெவல்ல தளபதியை ஸ்கிரீன்ல பார்க்கணும் வெறித்தனமான கெட்டப்பில் முழுமையான பவர் மாஸ் அதிரடி கேங்க்ஸ்டார் படத்தை செய்யுங்க பாஸ் என்று கூறியிருந்தார். அதற்கும் அட்லீ செஞ்சிட்டா போச்சு என உறுதியளித்துள்ளார். அட்லி இந்த பதிலை படித்ததும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்தடுத்து தங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

Leave a Reply

Right Menu Icon