--- --:--:-- --

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் – கேரள முதல்வருடன் எதிர்க்கட்சி தலைவரும் பங்கேற்பு

jg

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் கை கோர்த்துள்ளதால் போராட்டம் தீவிரமாகியுள்ளது.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் வன்முறை வெடித்துள்ளது. கல்லூரி மாணவர்களும் தற்போது போராட்மத்தில் குதித்துள்ளனர்.

 

இதற்கிடையே மத்திய அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என கேரளா, மே.வங்கம், பஞ்சாப், புதுச்சேரி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர். முதன் முதலில் இந்த அறிவிப்பை வெளியிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இன்று 3 மணி நேர சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

 

பினராயி விஜயன் மாநில அமைச்சர்களும் இந்தப் போராட்ட்த்தில் பங்கேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சன்னிதலாவும் தமது கட்சித் தலைவர்களுடன் பங்கேற்றுள்ளார்.மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளது அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon