பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட குழந்தை
ராஜஸ்தானில் பாத்திரத்தில் தலையை நுழைத்து சிக்கிக்கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. அம்மாநிலத்தில் ஜாலாவரியை சேர்ந்த தம்பதியர் 3 வயது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அங்கிருந்த பாத்திரம் ஒன்றில் தலையை நுழைத்து விளையாடிய போது குழந்தையின் தலை அதற்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் குழந்தை வீறிட்டு அலறியது. இந்த சத்தம் கேட்ட பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி பாத்திரத்தை பத்திரமாக வெட்டி குழந்தையை மீட்டனர். இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




