--- --:--:-- --
7

கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் கடந்த 26ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

 

அப்போது அவரது ஆண் நண்பர்கள் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நாராயணமூர்த்தி, பிரகாஷ், கார்த்திகேயன், ராகுல் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

 

முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவன் கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் என்பவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon