--- --:--:-- --

கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் ரூ 1000 பொங்கல் பரிசு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

egs

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ 1000 பணத்துடன், அரிசி கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

கருணாநிதி முதல்வராக இருந்த போது, தைப்பொங்கலுக்கு அரிசி, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை இலவசமாக வழங்கினார். அதற்கடுத்து முதல்வராக வந்த ஜெயலலிதா, இந்தப் பொருட்களுடன் கரும்பையும் சேர்த்ததுடன் ௹ 100 பணமும் வழங்கினார்.

ஜெயல்லிதா மறைவுக்குப் பின் முதல் வரான எடப்பாடி பழனிசாமியோ, கடந்தாண்டு பொங்கலுக்கு, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களுடன் தலா ரூ.1000 என வழங்கி மக்களை சந்தோசத்தில் திக்குமுக்காடச் செய்தார்.

 

தற்போது உள்ளாட்சித் தேர்தல் வர உள்ள நிலையில், பொங்கல் பரிசுத்தொகையாக ரூ 2000 வரை வழங்கப்படலாம் என்று பரவலாக பேச்சு அடிபட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று நடந்த புதிய மாவட்டம் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வரும் பொங்கலுக்கும் கடந்த ஆண்டைப் போலவே கரும்பு,ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முந்திரி, ஏலம், உலர் திராட்சை பொருட்களுடன் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon