ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உயிரிழந்த கோவில் காளையை மேளதாளம் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தி பொதுமக்கள் அடக்கம் செய்தனர். கமுதி அடுத்த உடைய நாதபுரம் கிராமத்திற்கு சொந்தமான கோவிலில் கிராம மக்கள் சேர்ந்து காளையை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக கோவிலில் காலை திடீரென மரணமடைந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில் பெண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து காளையை குளிப்பாட்டி மாலை மற்றும் கைத்தறி ஆடைகளை அணிவித்து இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் மேளதாளங்கள் முழங்க காளைக்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அங்குள்ள கண்மாய் கரையோரம் காளையை பொதுமக்கள் அடக்கம் செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு காளையை வணங்கினார்.