--- --:--:-- --

மகாராஷ்டிரா விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்..?பரபரப்பான வாதம் தொடங்கியது!!

images

மகாராஷ்டிராவில், அவசர, அவசரமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்தும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை முடிவில் உச்ச நீதிமன்றம் வழங்கப் போகும் பரபரப்பான தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.

 

மகாராஷ்டிராவில், பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றதை எதிர்த்து, சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இந்தக் கட்சிகள் முறையிட்டதைத் தொடர்ந்து, விடுமுறை தினமான இன்று காலை 11.30 மணிக்கு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதித்தது.

 

அதன்படி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன் விசாரணை தொடங்கியது. சிவசேனா கூட்டணி தாப்பில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்து வருகின்றனர். மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார். இதனால் இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த வழக்கு விசாரணை முடிவில், மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை இன்றே பிறப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

 

இதனால், மகாராஷ்டிராவில் பட்னாவிைஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது செல்லுமா?, உடனடியாக பெரும்பான்மையை நீரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பது போன்ற கேள்வி களுக்கு விடை தெரிய உள்ளதால், இந்த வழக்கு விசாரணை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon