--- --:--:-- --

24 மணி நேரத்தில், பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்..! உச்சநீதி மன்றத்தில் சிவசேனா – என்.சி.பி., காங்., முறையீடு!!

hgjk

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள பட்னாவிஸ், சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி, சிவசேனா – என்.சி.பி-காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இதனால் இன்றிரவே இந்த முறையீடு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மகாராஷ்டிராவில் பாஜகவின் பட்னாவிஸ் அவசர, அவசரமாக முதல்வராக பதவியேற்றதும், அவருக்கு ஆதரவாக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி செயல்பட்டதும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தரப்பை கொந்தளிக்கச் செய்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பத்திரப்படுத்தும் முயற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. அத்துடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த 3 கட்சி களின் தலைவர்களும் அடுத்தடுத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

இதற்கிடையே, மாநில ஆளுநரின் முடிவை எதிர்த்தும், முதல்வர் பதவியேற்றுள்ள பட்னாவிஸ், 24 மணி நேரத்தில் சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோரியும், 3 கட்சிகளின் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர அவசரமாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் 3 கட்சிகள் சார்பிலும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2018-ல் கர்நாடகத்தில் பாஜகவின் எடியூரப்பா, இதே போன்றுதான் பெரும்பான்மை பலமின்றி முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாள் அவகாசமும் வழங்கியிருந்தார் அம்மாநில ஆளுநர் . காங்கிரஸ் தரப்பில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட, இரவு முழுவதும் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, மறுநாளே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனால், குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுத்து விடலாம் என்ற எடியூரப்பாவின் நம்பிக்கை தகர்ந்தது. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்தார்,

 

இதையே சிவசேனா தாப்பு முன்னுதாரணமாகக் காட்டி, இப்போதும் மகாராஷ்டிராவில் பட்னாவிசுக்கு கால அவகாசம் வழங்கினால், குதிரை பேரத்தில் பாஜக தரப்பினர் ஈடுபடுவார்கள். எனவே 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றிரவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon