--- --:--:-- --

கோவா திரைப்பட விழாவில் குழப்பம்..

9

50 ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய மொழிகளில் 26 திரைப்படங்கள் திரையிடப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

 

இவ்விழாவில் இந்திய சினிமாவின் முன்னோடி ஜாம்பவான் சத்திய ஜித்ரேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஹென்றிக் கிப்சனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு 1989ஆம் ஆண்டு ஜித்ரே இயக்கிய கனசத்ரு திரைப்படம் திரையிடப்பட இருப்பதாக ஐ‌எஃப்‌எஃப்‌ஐ தனது இணையப்பக்கத்தில் தெரிவித்திருந்தது.

 

ஆனால் அதில் இயக்குனர் சத்ய ஜித்ரேவின் புகைப்படத்திற்கு பதிலாக பாடலாசிரியர் குல்சரின் புகைப்படத்தை தவறுதலாக பதிவேற்றி உள்ளது ஐ‌எஃப்‌எஃப்‌ஐ . அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒருவர் இணையத்தில் பதிவிட தற்போது அந்த படம் வைரலாகி இருக்கிறது.

 

குல்சருக்கும். சத்யஜித்ரேவிற்க்கும் வித்தியாசம் தெரியாமல் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது என பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon