வாய்வழியே சிறுநீரை எடுத்து உயிரை காத்த மருத்துவர்…!
மனிதகுலத்தின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கடவுள் இருப்பதாக நம்பபட்டாலும் உண்மையில் மானுடத்தின் நம்பிக்கையை சாத்தியப்படுத்துவது மருத்துவர்களே! அதனாலேயே இங்கு மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள்.
அவர்களை அவ்வாறு பார்ப்பதற்கு காரணம் இருக்கிறது. தாய்க்கு அடுத்தபடியாக ஒருவனின் கழிவுகளை தன் மகனின் கழிவுகள் போல் பாவித்து அதனை தூய்மை செய்யும் ஒரே மானுட கடவுள் மருத்துவர்தான் என்றால் அது மறுக்க முடியாத உண்மை. அந்த உண்மையை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மருத்துவர் ஜான்.
சீனாவின் ஒரு நகரத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை சீன விமானம் ஒன்று நியூயார்கிற்க்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளையில் 70 வயது முதியவர் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது கொடூரமான வழி ஏற்படும் டைசூரியா என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறிது நேரம் தாக்குபிடித்த அந்த முதியவர் ஒரு கட்டத்தில் சிறுநீர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால் வலி தாங்காமல் கதறி துடித்தார். இதனை கண்ட உடனே விமானத்திலிருந்த மருத்துவர்களான ஜான் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர், பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு முதியவரின் உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அவரின் உடலில் அதிகளவு சிறுநீர் இருந்ததால் அவர்களால் துரிதமாக அவரின் உடலில் இருந்த முழு சிறுநீரையும் வெளியேற்ற முடியவில்லை. முழு சிறு நீரை வெளியேற்றினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை,பதற்றம் தொற்றிக் கொள்ள யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த காரியத்தை செய்தார் மருத்துவர் ஜான்.
அது என்னவென்றால் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராவை தனது வாயில் வைத்து உறிஞ்சி கிட்டத்தட்ட 37 நிமிடங்கள் போராடி 800 மில்லி அளவிலான சிறுநீரை வெளியேற்றினர். சிறுநீர் வெளியேற்ற பட்டவுடன் முதியவர் தனது இயல்பு நிலைக்கு திரும்பி ஆசுவாசப்பட்டார். இதன் மூலம் அவரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து அந்த டாக்டரிடம் கேட்டபோது அவரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டும் இருந்ததாகவும் வேறு எதையும் கவனிக்கவில்லை என்றும் பதிலளித்துள்ளார். சற்றும் யோசிக்காமல் மருத்துவர் செய்த இந்தச் செயல் வீடியோ வடிவில் இணையத்தில் பரவ தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் மருத்துவர் ஜான்.






