--- --:--:-- --

தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும்

4

தமிழை நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.

 

அண்மையில் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழியின் சிறப்பு குறித்து கூறி பெருமைப்படுத்தினார் என்றும், அத்தகைய பழமையான தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அதன்மூலம் யுனெஸ்கோ போன்ற அமைப்புகளின் உதவிகளும், நிதியும் கிடைக்க வழி ஏற்படும் என்றும், அதனால் தொன்மையான பண்டைய தமிழ் மொழியை மேலும் முன்னேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon