சோனியா, ராகுலுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் ஏன்? மக்களவையில் அமளி- திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்ட விவகாரத்தில், நாடாளுமன்ற இரு அவைகளிலும், காங்கிரஸ் ம்ற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்.பிக்கள் வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே,காஷ்மீர் மூன்னாள் முதல்வரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். 2-வது நாளான இன்றும் பரூக் அப்துல்லா விவகாரம், போராட்டம் நடத்தும் டெல்லி ஜவஹர்லால் நேரு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் கொண்டது போன்ற விவகாரங்களை எழுப்பி எம்.பி.க்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மாநிலங்களவையில் அலுவல்கள் ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையிலும் இதே பிரச்னைகளை எழுப்பி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். சோனியா குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதைக் கண்டித்து, திமுக எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்பிலும் ஈடுபட்டனர்.





