--- --:--:-- --

வாட்ஸ் ஆப் திடீர் எச்சரிக்கை! வீடியோவை டவுன்லோட் செய்யாதீங்க!

11

வாட்ஸ் அப்பில் தெரியாத எண்ணில் இருந்து வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென்று பயனாளர்களுக்கு அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடியோ பைல்கள் மூலம் தகவல்களை திருடும் முயற்சி நடைபெறுவதாகவும் வாட்ஸ்அப் சுட்டிக்காட்டுகிறது.

 

பெகாஸஸ் மால்வேரை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்த விவாதம் மறைவதற்குள் மற்றொரு மால்வேர் குறித்த வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சிஏஆர்டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீம் இந்த வாட்ஸப்பில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சுட்டிக் காட்டியுள்ளது. இதன்படி புதிய மால்வேர் ஆனது mp4 பைல் வடிவத்தில் பயனர்களின் எண்ணுக்கு மெஸேஜ் ஆக அனுப்பப்படும்.

 

இந்த வீடியோ மெசேஜ் ஓபன் செய்ததும் போன் ஹேக்கரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இதன் மூலம் அந்த நபரின் வாட்ஸ்அப் அக்கவுண்ட், உரையாடல்கள் ,புகைப்படம் மற்றும் போனில் உள்ள தகவல்களை திருட முடியும். இந்த மால்வேர் அதிதீவிர அச்சுறுத்தலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு தளத்தை சேர்ந்த பயனாளர்களையும் இது தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பாலோனோர் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் டவுன்லோடை ஆன் செய்து வைத்திருப்பர்.

 

இவர்களின் வாட்ஸ் அப்பிற்கு அந்த மால்வேர் கொண்ட வீடியோ வரும் பட்சத்தில் ஆட்டோமேட்டிக்காக டவுன்லோட் ஆகி தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளது.எனவே ஆட்டோமேட்டிக் வீடியோ டவுன்லோட் ஆப்சனை ஆப் செய்து வைக்க வேண்டும்.

 

தெரியாத எண்ணில் இருந்து அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் வரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸப்பில் சமீபத்திய வெர்சனை டவுன்லோட் செய்து கொள்ளும்படி அந்த நிறுவனம் பயனாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon