ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்றியபோது நேர்ந்த துயரம்!

ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்றிய அண்ணன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது .

 

பெத்தானியாபுரத்தில் குமார் என்பவரது மகன்களான ஆகாஷ், பாலமுருகன் உள்ளிட்ட 4 பேர் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆகாஷ் ஆற்று நீரில் மூழ்கியுள்ளான். இதனை கண்ட அவரது சகோதரன் பாலமுருகன் ஆற்றில் குதித்து ஆகாஷை மீட்டார்.

 

தம்பியை பத்திரமாகக் கரை சேர்த்த நிலையில் பாலமுருகன் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பாலமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாலமுருகன் சடலமாக மீட்கப்பட்டார்.


Leave a Reply