அரிசி வியாபாரம் நஷ்டம்! கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்!
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த இளைஞர் சுத்தியல், கடப்பாறையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முற்பட்டார்.
மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எச்சரிக்கை மணி அடித்ததையடுத்து முதன்மை அலுவலகத்தில் இருந்து சென்னை ஜே.ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த இளைஞரை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அரிசி வியாபாரத்தில் 6 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், அந்த கடனை அடைக்க ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




