--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது!!

hfg

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

 

கடந்த 3 வருடங்களாக இழுபறியாக இருந்து வந்த உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் நடைபெறுவது உறுதி எனக் கூறப்படுகிறது. ஆளும் அதிமுக தரப்பிலும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்கர்கள் ஓங்கி ஒலிக்கின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளில் அனைத்துக் கட்சியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

 

தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறுவதிலும் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக சார்பில் நேற்றும், இன்றும் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. ஆளும் அதிமுக தரப்பில் இன்றும் , நாளையும் மாவட்ட அதிமுக அலுவலகங்களில் விருப்ப மனு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை அந்தந்த மாவட்டங்களில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

மாநகராட்சி மேயர், கவுன்சிலர், நகராட்சித் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று, நாளை மாலைக்குள் மாவட்ட அதிமுக அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை பெற்றுச் செல்கின்றனர்.

 

இதே போல், தேமுதிக சார்பிலும் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. .அந்தந்த மாவட்ட தேமுதிக அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon