வடமாநிலத்தினர் புரிதல் இல்லாமல் கருத்து தெரிவிக்கின்றனர் – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கோயில் சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகள் குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் கருத்து தெரிவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் வழிபாட்டு முறைகள், கோயில் மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும், அவற்றைப் புரிந்துகொள்ளாமல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து தெரிவிப்பது சரியல்ல என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





