ரிஷலியு செங்கோர் விருது பெறும் முதல் இந்தியர்!
புதுச்சேரியைச் சேர்ந்த அருண்குமார் சந்தலிங்கத்தை 2026ஆம் ஆண்டுக்கான ரிஷலியு செங்கோர் விருதாளராகப் பாரிஸ் ரிஷலியு செங்கோர் வட்டம் (Cercle Richelieu Senghor) அறிவித்துள்ளது. இந்த விருது அவருக்கு வரும் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று பாரிஸில் வழங்கப்படுகிறது. உலக அளவில் பிரெஞ்சு மொழியை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. 1987-ல் இந்த விருது தொடங்கப்பட்டதிலிருந்து, இதைப் பெறும் முதல் இந்தியர் அருண்குமார் சந்தலிங்கம் ஆவார்.
இதனிடையே பிரெஞ்சு அரசின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான பால்ம் அகாடமிக் (Palmes académiques) செவாலியே விருதை ஏற்கெனவே பெற்றுள்ளதாக பேராசிரியர் அருண்குமார் சந்தலிங்கம் கூறினார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரெஞ்சு கற்பித்து வரும் அருண்குமார், பதினான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் சுல்வித்துறைத் தலைமைப் கற்பித்தல் (FLE) துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் பிரான்கோஃபோனிக்கான பன்னாட்டு அமைப்பு (OIF), பிரான்கோஃபோனி பல்கலைக்கழக முகமையின் (AUF) ஆசிய-பசிபிக் பிரிவு ஆகியவற்றின் நிபுணராகவும், இந்தியப் பிரெஞ்சுத் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் அருண்குமார் பதவி வகித்து வருகிறார். பேராசிரியர் அருண்குமார், செயற்கை நுண்ணறிவின் கல்விசார், நெறிமுறைசார் பயன்பாடுகளை ஆராய்ந்து ஒன்பது நாடுகளில் 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




