--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சர்ச்சை – சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்;

6

பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “நேற்று முன் தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் எஸ்.பி தலைமையில் ஐ.ஜி மேற்பார்வையில் விசாரணையை நடத்துகிறோம். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

தொடர்ந்து, ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அழுத்தம் உள்ளதா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “இந்த விவகாரத்தில் விசாரணை நியாயமான முறையில் நடைபெறும். சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon