--- --:--:-- --

அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ் திடீர் தடை!

5

அ.தி.மு.க தலைமையின் அனுமதியின்றி நிர்வாகிகள் யாரும் பேட்டியளிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று அ.தி.மு.க பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

முன்னாள் தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ கழகப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக பீடுநடைபோட்டு வருகிறது.

 

 

அந்த வகையில், கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து, கழகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்று, அதன்பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூகத் தொடர்பு ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் வேண்டும்.

 

 

அதேபோல், அறிக்கை ஏதேனும் வெளியிடுவதாக இருந்தால், கண்டிப்பாக தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். கழக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், கழகத் தலைமையின் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon