--- --:--:-- --

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் – தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை தேவை – உதயநிதி ஸ்டாலின்

1

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மேலும் தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை இல்லையென்றும், குற்றத்தை மறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார்.

 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரை மறைக்க முயன்றதாகக் குற்றம்சாட்டி, அருள் விக்னேஷ் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர் சாய் குமாரையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அவர் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுபோல், இந்தியாவிலேயே இதுபோன்ற நிகழ்வுகள் இதுவரை நடந்ததில்லை. அந்த கேவலம், தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் இப்போது நடந்திருக்கிறது” என விமர்சித்தார்.

 

“116 நாட்கள் கழித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 116 நாள் சட்டம் ஒழுங்கு கைகளில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
”முதல் 6 மாதங்கள் ஆட்சிக்கு ஹனிமூன் பீரியட் என்பதை சட்டமன்ற உறுப்பினர் தவறாக புரிந்து கொண்டு அதேபோல் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளனர். மதுபோதையில் ஆட்சியர் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்துள்ளார். ஜூலை 31-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. கனிமொழி எம்.பியும் முதன் முதலாக இதைப் பற்றி பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

 

 

ஆனால் ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் இதை மறுத்துவந்தனர். ஆனால், ஆட்சியர் இந்த புகார் அளித்தபோது அவரை வேறு மாவட்டத்துக்கு மாறிக்கொள்ளுமாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மூடி மறைக்கும் வகையில் பேசி இருக்கிறார். எனவே இந்த குற்றத்தை மறைக்க முயன்ற தலைமைச் செயலரை குற்றவாளியாக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

 

 

மேலும் எம்.எல்.ஏ-வை பாதுகாக்க தவெக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் அவரை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

அதேபோல துணை சபாநாயகர் மீது அளித்த புகார் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகரை கைது செய்ய வேண்டும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon