--- --:--:-- --

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா – ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்க மு.க. ஸ்டாலின் மறுப்பு?

1

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை ஏற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதையான Belonging: A Journey of Love என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைத் தொலைபேசியில் அழைக்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அது தொடர்பாக ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து மு.க. ஸ்டாலின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தத் தகவல் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது, தான் வேறு முக்கியப் பணிகளில் இருப்பதாகக் கூறி ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேசுவதை அவர் தவிர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக தரப்பில் ஐந்து முறை அழைப்பு விடுக்கப்பட்ட போது ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை என திமுக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.

 

 

மேலும் காங்கிரஸ் உடனான நீண்ட கால உறவை ராகுல் காந்தி கசப்பாக மாற்றிவிட்டதாகவும் திமுக மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், சோனியா காந்தியின் புத்தகம் வெற்றி பெற தனது வாழ்த்தை மு.க. ஸ்டாலின் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon