--- --:--:-- --

மீண்டும் ரூ.98,000 கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை..!

2

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் மீண்டும் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் ரூ.12,215க்கும், சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ஒரு சவரன் ரூ.97,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.205 குறைந்து ஒரு கிராம் ரூ.10,000க்கும், சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு சவரன் ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து கிராம் ரூ.185க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon