--- --:--:-- --

நகைக்கடை கொள்ளைத் திட்டம் மீனாட்சிக்கு முன்பே தெரியும், தொலைபேசி உரையாடல் மூலம் கைது – காவல் ஆணையர்

13

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிஷாந்த் நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தது அவரது தோழி மீனாட்சிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

நிஷாந்துடன் மீனாட்சி பேசிய தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டே அவரைக் கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறிய நிஷாந்தைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon