தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது – பரந்தாமன்
முதல்வர் விஜய் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது மேகதாது அணை பற்றி பேசினீர்களா? மேகதாது அணையைக் கட்டக் கூடாது என்று கோரிக்கை வைத்தீர்களா? மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு உறுதியாக சொல்கிறது.
தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காவிரி, டெல்டா விவசாய பகுதிகளை வறண்ட பாலைவனமாக ஆக்குவதை நோக்கி முதல்வர் விஜய் சென்று கொண்டிருக்கிறார் என்று தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




