--- --:--:-- --

சென்னையில் அபாயத்தை எட்டிய காற்று தர குறியீடு..!

3

தீபாவளி எதிரொலியாக, சென்னையில் காற்றின் தரம் ‘அபாயம்’ என்ற அளவை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருப்பதாக சூழலியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக சைதாப்பேட்டையில் காற்றின் தர குறியீடு 302-ஆக பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடிய நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் புகை மண்டலங்களாகக் காட்சி அளித்தன.

 

 

சென்னையில் வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளை புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகினர்.
அதேபோல, தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தன. குறிப்பாக, தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை, கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அடந்த புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால், குழந்தைகளும், முதியவர்களும் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

 

 

இந்த நிலையில், சென்னையில் காற்று தரக் குறியீடு 1,300-ஐ நெருங்கி, ‘அபாயம்’ என்ற அளவை எட்டியுள்ளது. இந்த காற்று மாசின் அளவு 60 சிகரெட் பிடித்ததற்கு சமம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான சுந்தர்ராஜன் வேதனை தெரிவித்துள்ளார். பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon