--- --:--:-- --

சமூகவலைதள பதிவுகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு!

6

அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடர்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சையது ஆலிம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசுக்கு எதிராக விமர்சனங்கள், அரசியல் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

 

 

இதுசம்பந்தமான புகார்களை முறையாக ஆய்வு செய்யாமல், காவல்துறையினர், இயந்திரத்தனமாக வழக்குப்பதிவு செய்து வருவதாக கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஜென் ஸி பிரிவு தலைவர் அன்பானந்தன், கட்சியின் ஆதரவாளர் வினோத் சூர்யகுமார் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சுட்டிக்காட்டிய மனுதாரர், பேச்சு சுதந்திரம் என்ற ஜனநாயக உரிமைக்கு எதிராக அளிக்கப்படும் புகார்களை கையாள காவல்துறையினருக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

அரசியல் பேச்சுகள், சமூகவலைதளப் பதிவுகள் தொடர்பாக குற்றவியல் சட்டங்கள், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தெலங்கானா உயர்நீதிமன்றம், புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டும், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை வகுத்துள்ளது.

 

இதேபோன்று, தமிழகத்திலும் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க தமிழக காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon