‘ஓம்’ இசை வெளியீட்டு விழா – அரசியல் பேச தயாராகும் நடிகர் தனுஷ்?
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஓம்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மம்மூட்டி வில்லனாக நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், நாளை ஓம் இசை வெளியீட்டு விழா தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகைக் கட்டுப்பாடு காரணமாக கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தற்போது 8000 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் தன்னைச் சுற்றி நடைபெறும் அரசியல் பேச்சுகளுக்குப் பதில் தருவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த விழாவில் பங்கேற்க சென்னை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளும், மற்ற மாவட்டங்களில் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் அரசியல் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகளிரணியினருக்கு வெள்ளி காமாட்சி விளக்கை அளித்து தீபாவளி வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் ஓம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்தான கருத்துகளை நடிகர் தனுஷ் பேச இருக்கிறார் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




