சாத்தனூர் அணையில் பாதுகாப்பு ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு நிலை குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் கட்டமைப்பு, நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சாத்தனூர் அணை, கொள்ளளவு மற்றும் உயரத்தின் அடிப்படையில் மாநிலத்தின் மூன்றாவது பெரிய அணையாகக் குறிப்பிடப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




