அரசுப் பேருந்துகளில் பயணிகளைப் பாதியில் இறக்கினால் கடும் நடவடிக்கை
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்பாகவே பாதியில் இறக்கிவிடும் சம்பவங்கள் தொடர்பாகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு முறையான சேவை வழங்கப்பட வேண்டும் என்றும், பயணிகளைப் பாதியில் இறக்கிவிடுவது போன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் பொதுமக்களின் பயணப் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




