--- --:--:-- --

குழந்தைகள் தினத்தையொட்டி 61.84 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு

images - 2026-11-04T180113.300

தமிழகத்தில் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கேக் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

மாநிலம் முழுவதும் சுமார் 61.84 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கேக் வழங்குவதற்காக ரூ.9.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கேக்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

 

 

நவம்பர் 14ஆம் தேதி விடுமுறை என்பதால் நவம்பர் 13ஆம் தேதியே பள்ளிகளில் கேக்குகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரும்போது கேக் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon