--- --:--:-- --

14 மாவட்டங்களில் மழை – சென்னை வானிலை மையம் அறிவிப்பு

images - 2026-11-04T174127.744

தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

மேலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வானிலை நிலவரத்தைக் கவனித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon