--- --:--:-- --

நடிகர் அதர்வா மீது காவல் ஆணையரிடம் பண மோசடி புகார்

1

நடிகர் அதர்வா பண மோசடி செய்ததாக கூறி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.

 

திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான மதியழகன் என்பவர் காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் அதர்வா தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான செம போதை ஆகாதே திரை படத்தின் விநியோக உரிமையை 5.5 கோடி ரூபாய் அளவிற்கு பெற்றதாக கூறியிருக்கிறார்.

 

படம் வெளியாவதில் தாமதமானதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் நஷ்டத்துக்கு ஈடாக மின்னல் வீரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும் தெரிவித்த மதியழகன் ஆனால் அந்த படத்தை முடித்து தராமல் அவர் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

 

இதனால் தமக்கு 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதர்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மதியழகன் தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon