--- --:--:-- --

அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

13

இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தித் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வயது வரம்பு உயர்வினைச் சிறப்புச் சலுகையாக வழங்கியுள்ள அரசு, இது பி.சி, பி.சி(எம்), எம்.பி.சி & டி.என்.சி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ஏற்கனவே வழக்கில் இருக்கும் வயதுச் சலுகைகளுடன் கூடுதலாகப் பொருந்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. அரசின் இந்த அதிரடி முடிவால், அரசுப் பணிக்குத் தயாராகி வரும் பல்வேறு பிரிவு போட்டித் தேர்வர்களும் பெரும் மகிழ்ச்சியும் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon