--- --:--:-- --

காவலரிடம் செல்ஃபோன் பறிப்பு – இரு மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

16

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே காவலரிடம் கைபேசியை பறித்து சென்ற மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சிலம்பரசன்.

 

இவர் நேற்று இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் சிலம்பரசனை தாக்கிவிட்டு கைபேசியை பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கொள்ளையர்களை தேடியுள்ளனர்.

 

பின்னர் அங்கு பதுங்கியிருந்த மூன்று இளைஞர்களையும் பிடித்து சென்று விசாரித்தனர். அதில் ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர் மற்றொருவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon