--- --:--:-- --

பைக்கில் கஞ்சா டோர்டெலிவரி !

14

சென்னையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை டோர் டெலிவெரி செய்து வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா டெலிவரி நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீசார் மாறுவேடத்தில் கஞ்சா கேட்டுள்ளனர். அப்போது கோடம்பாக்கத்திற்கு கஞ்சா எடுத்துவந்த லிண்டன் டோனி என்பவரை கைது செய்தனர்.

 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமலக்கண்ணன் மற்றும்ஐ‌ஐ‌டி பணி புரியும் அரவிந்த் ஆகியோர் தான் கஞ்சா விற்பனை செய்யச் சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon