அ.தி.மு.க 55-ஆம் ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 17, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்றுப் பேசுகிறார். இக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சி.வி.சண்முகத்தின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




